‘தமிழ் சினிமா பாதி, இந்தி சினிமா பாதி’ - பாலிவுட் படங்களில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

‘தமிழ் சினிமா பாதி, இந்தி சினிமா பாதி’ - பாலிவுட் படங்களில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

கோலிவுட்டின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இனிமேல் இந்தி படங்களிலும் அதிகளவில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாதத்தில் பாதி நாட்கள் மும்பையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று படங்களில் நடித்து வருவதால் இந்த ஏற்பாடு. அவருக்காக பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தனி பிளாட்டையே ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்கள். அதிலேயே அவர் தங்கிக் கொள்கிறார். தமிழ்நாட்டு உணவுக்காக சமையல்காரர் ஒருவர் அவருக்கான உணவை தயாரிக்கிறார்.

இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னைக்கு வந்து குழந்தைகளோடு இருந்துவிட்டு ஞாயிறு இரவே மும்பைக்கு பயணமாகி விடுகிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பும் அங்கே பிரபலமாகி வருகிறதாம். அங்கே மல்டி ஸ்டார் வகை படங்கள் சாதாரணம் என்பதால், அவர் மேலும் அதிகளவில் பாலிவுட் படங்களில் கமிட் ஆக சான்ஸ் அதிகரித்துள்ளதாம்.

இதனால் இனிமேல் தமிழ் படங்கள், இந்தி படங்களென 50/50 என பாதி பாதியாக அவர் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மும்பை ஸ்டே இதனை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in