திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய விஜய் சேதுபதி

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய விஜய் சேதுபதி

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு (ஃபெஃப்சி) தொடர்ந்து திரைப்பட தொழிலாளர்களுக்கான பல திட்டங்களை அமல்படுத்திவருகிறது. கரோனா காலகட்டத்தில் வேலையில்லாமலிருந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு அரிசி வழங்குவதில் ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அவ்வகையில் தற்போது திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு உதவும் வகையில் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக ஃபெஃப்சி-யின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அளித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு, பாக்கியராஜ் போன்ற சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி அளித்தார்.

Related Stories

No stories found.