மீண்டும் இணையும் கமல்ஹாசன் - விஜய் சேதுபதி!

மீண்டும் இணையும் கமல்ஹாசன் - விஜய் சேதுபதி!

ஹெச்.வினோத் இயக்கவுள்ள திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெகா பிளாக்பஸ்டர் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு, கமல்ஹாசன் அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாக வெளியான கமலின் 'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி வில்லன்களில் ஒருவராக நடித்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதிபதிக்கு மீண்டும் கமல்ஹாசனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் வினோத் மும்முரமாக இருப்பதால், அது முடிந்ததும், கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகுமாம் .

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'KH233' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் படம் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பை முடித்தவுடன், 'KH233' படத்தின் படப்பிடிப்பு 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்குமாம். இதனையடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in