புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில், நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் மறைவு இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல், பெங்களூரு காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி, சிவகார்த்திகேயன், சூர்யா உட்பட பல தமிழக சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு நேரில் சென்று, இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in