வெப் தொடர் இயக்கும் விஜய் மில்டன்!

வெப் தொடர் இயக்கும் விஜய் மில்டன்!

கோலிசோடா கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை விஜய் மில்டன் இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் மில்டன். இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட நடிகர்கள், தனஞ்செயா, பிருத்வி அம்பர் ஆகியோர் இந்தப் படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமாகிறார்கள்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் ‘பைரகி’ படத்தையும் இயக்கி முடித்துள்ள விஜய் மில்டன், இப்போது வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு ’கோலி 15 சோடா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

’கோலிசோடா’, ’கோலிசோடா 2’ கதைகளுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

ஹாட்ஸ்டாருக்காக உருவாகும் இந்தத் தொடரில் யார், யார் நடிக்கிறார்கள் என்கிற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in