விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் விஜயின் ஒப்புதலின்றி அவரது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி ‘அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி தனது பெயரைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகக் கூறி தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் அவரது தந்தையின் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 11 பேரின் மீது 15வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடந்தது. இதில், எஸ்.ஏ.சந்திரசேகர் “விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக” பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் பதில் மனுவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.