விஜயின் இந்த முடிவு ஆபத்தானது... இயக்குநர் பேரரசு பரபரப்பு!

விஜய் - பேரரசு
விஜய் - பேரரசு

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்த கருத்து மிகவும் ஆபத்தானது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இதயக்கோவில் படத்துவக்க விழா
இதயக்கோவில் படத்துவக்க விழா

அறிமுக இயக்குநர் ஜீவன்மயில் இயக்கத்தில், விஜய ராஜேந்திரன் தயாரிப்பில் எடுக்கப்பட உள்ள திரைப்படம் இதயக்கோவில். இப்படத்தின் படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த விழாவைத் தொடர்ந்து இயக்குநர் பேரரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் விஜய் கட்சி தொடங்கியிருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், விஜய் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

அதற்கான தகுதிகள் அத்தனையும் அவருக்கு இருப்பதாகவும் கூறினார். மேலும், பல ஆண்டுகளாக அவர் தனது மக்கள் மன்றம் மூலம் பலருக்கு உதவிகள் செய்து வந்தார் என்றும், தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியிருப்பதற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு

அப்போது, அவர் இன்னும் இரண்டு படங்களுடன் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, "விஜயின் இந்த முடிவு மிகத் தவறான முடிவு. தவறான முடிவு என்பதுடன் ஆபத்தான முடிவும்கூட. அவர் அரசியலுக்கு வர சினிமா புகழும், தனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களும் தான் காரணம். அதனால், சினிமா புகழ் தான் அவருக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறுவது சரியாக இருக்காது. அரசியலில் அவரது லட்சியத்தை அடையும் வரை சினிமாவை அவர் விட்டு விடக்கூடாது” என்று இயக்குநர் பேரரசு வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in