
‘லியோ’ படத்திற்காக நடிகர் விஜய் 30 கெட்டப்புகள் முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘லியோ’. மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் தங்களது போர்ஷனை முடித்த நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். காஷ்மீர் ஷெட்யூல் அடுத்த மாதத்திற்குள் முடிந்து படக்குழு சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்திற்காக நடிகர் விஜய் 30 கெட்டப் முயற்சி செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
’லியோ’ படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரில் உள்ள லுக் மற்றும் படப்பிடிப்புத் தளத்திற்கு சஞ்சய் தத்தை விஜய் வரவேற்ற போது வெளியான வீடியோவில் இருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் விஜய். இந்த இரண்டு தோற்றங்களுமே கிட்டத்தட்ட 30 விதமான கெட்டப்புகளை விஜய் முயற்சி செய்து பார்த்தப் பிறகே இறுதியாகி உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.