`லியோ’ வெற்றிவிழாவில் விஜய் மட்டும்தான் கெஸ்ட்... கமல் பங்கேற்கவில்லை... உறுதி செய்த பிரபலம்!

விஜய்- கமல்
விஜய்- கமல்

'லியோ’ வெற்றி விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் விஜய் மட்டும்தான் சீஃப் கெஸ்ட் என பிரபலம் ஒருவர் உறுதி செய்து ட்வீட் போட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர். ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது விஜய் ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். என்ட்ரி பாஸூடன் ஆதார் கார்டு, விஜய் மக்கள் இயக்க கார்டு ஆகியவை கொண்டு வர வேண்டும் என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் லலித் உள்ளிட்டோர் நிகழ்விற்கு வந்துள்ளனர். நடிகர் விஜய், த்ரிஷா என மற்றவர்களின் வருகை, விஜய் சொல்ல இருக்கும் குட்டி கதை ரஜினிக்கு பதிலடியாக இருக்குமா என்பதையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்வார் என சொல்லப்பட்ட நிலையில் அதை மறுத்துள்ளார் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’லியோ’ வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய் மட்டும்தான் சீஃப் கெஸ்ட்’ எனக் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினத்தை ஒட்டி கேரளாவில் நடைபெற்ற ‘கேரள பிறவி’ விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in