`அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர்'- பற்ற வைத்த `வாரிசு' பட தயாரிப்பாளர்

`அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர்'- பற்ற வைத்த `வாரிசு' பட தயாரிப்பாளர்

தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர் என்று `வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருப்பது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு இதுஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துவிட்டது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு மட்டும் தனியாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அஜித்தின் துணிவும் ரிலீஸாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அஜித் படத்துக்கு தியேட்டர்கள் குறைவாக கிடைக்கும் என்றும் விஜய் படத்துக்கு தியேட்டர்கள் அதிகமாக கிடைக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. இரண்டு நடிகர்களும் பெரிய நடிகர்கள். இரண்டு பேருக்கும் சரி சமமாகத்தான் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் பல கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களை சூடேற்றும் வகையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர் என்று கூறியிருக்கிறார். இதனால் இருதரப்பு ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் மோதலை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in