அஜித் பைக் ஓட்ட பின்சீட்டில் விஜய் - நெல்லையை திரும்பிப் பார்க்கவைத்த பேனர்!

அஜித் பைக் ஓட்ட பின்சீட்டில் விஜய் - நெல்லையை திரும்பிப் பார்க்கவைத்த பேனர்!

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்களை முன்வைத்து இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ளும் நிலையில், திருநெல்வேலியில் தல - தளபதி ரசிகர்கள் என சேர்ந்தே பிரமாண்டமான பேனர் வைத்துள்ளனர். இதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பொங்கலுக்கு அஜித்குமார் நடித்த துணிவு, விஜயின் வாரிசு படங்கள் வெளியாகின்றன. இரு படங்களையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. துணிவு படத்தின் டிரெய்லர் யூ டியூப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

துணிவு, வாரிசு இருபடங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். போட்டி, போட்டுக்கொண்டு பெரிய, பெரிய பேனர்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களும் செய்துவருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் அஜித், விஜய் ரசிகர்கள் சேர்ந்து தல-தளபதி என்னும் பெயரில் இருபடங்களையும் வாழ்த்தி 25 அடி உயர்த்தில் பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர்.

இந்தப் பேனரில் அஜித் பைக் ஓட்ட, அதில் பின் சீட்டில் நடிகர் விஜய் அமர்ந்திருப்பது போல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அஜித், விஜய் என மோதிக்கொள்ளும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த பேனர் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகின்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in