ஹைதராபாத்தில் விஜய்யின் `வாரிசு' அடுத்த ஷெட்யூல்

ஹைதராபாத்தில் விஜய்யின் `வாரிசு' அடுத்த ஷெட்யூல்

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உட்பட பலர் நடிக்கின்றனர். குடும்பக் கதையை கொண்ட படம் என்பதால் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடந்து வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. பின்னர் சென்னையில் நடந்த படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. அங்குள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வரும் 25-ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் விஜய் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in