யோகிபாபுவுக்கு நடிகர் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: என்ன காரணம்?

யோகிபாபுவுக்கு நடிகர் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: என்ன காரணம்?

நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார் நடிகர் விஜய்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் தனக்கு புதிய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளதாக நடிகர் யோகிபாபு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அந்த பேட்டுடன் கூடிய புகைப்படம் ஒன்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ’இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி’ எனவும் கூறியுள்ளார்.

படப்பிடிப்புத்தளத்தில் நடிகர் யோகிபாபு அடிக்கடி கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவது வழக்கம். கிரிக்கெட் மீது யோகிபாபுவுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்தே இந்த பேட்டை நடிகர் விஜய் பரிசளித்துள்ளதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யுடன் இணைந்து பிகில், மெர்சல், சர்கார், பீஸ்ட் இப்போது வாரிசு ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in