அஜித் குடும்பப் படத்தை அதிகம் பகிரும் விஜய் ரசிகர்கள்; ‘பின்னணி’ என்ன?

குடும்பத்தினருடன் அஜித்
குடும்பத்தினருடன் அஜித்

மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உடன் நடிகர் அஜித்குமார் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றினை நடிகர் விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அதன் ’பின்னணி’ ரசிகர்களின் மனோபாவத்துக்கே உரியது.

விஜய் - அஜித் என என இரு உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் இணையவெளியில் மோதலில் ஈடுபடுவது வாடிக்கை. மீம்ஸ் போட்டு கலாய்ப்பது, தங்கள் நட்சத்திரங்களின் திரைப்படங்களை விதந்தோதி, அடுத்தவரை தாழ்த்துவது என தொடரும் பதிவுகளில் தரமிறங்குவதும் நடக்கும். தங்கள் திரைப்படங்களின் வெற்றிக்காகவும், ரசிகர்களின் உற்சாகத்துக்காகவும் திரைப்படங்களின் பஞ்ச வசனங்கள் முதல் போட்டிக்காக ஒரே சமயத்தில் திரைப்படங்களை வெளியிடுவது வரை நட்சத்திரங்களும் இந்த கோதாவில் பங்கேற்பது உண்டு.

ஆனால் அதிசயமாக அஜித் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அவற்றுக்கு அரை மனதோடு அஜித் ரசிகர்கள் இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர். அதன் பின்னணி சுவாரசியமானது. இளம் ரசிகர்களின் எளிய மனோபாவத்துக்கே உரியது.

அஜித் பின்னணியில் லியோ
அஜித் பின்னணியில் லியோ

குடும்பத்தினருடன் வெளிநாட்டு பயணத்தில் மும்முரமாக இருக்கிறார் அஜித். இதனையொட்டிய புகைப்படங்களை அவ்வப்போது ஷாலினி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்வதும் உண்டு. அப்படி ஒரு படத்தில், அஜித் - ஷாலின் தம்பதியுடன் அவர்களது மகன் ஆத்விக்கும் இடம்பெற்றிருக்கிறார். கால்பந்து மைதானம் ஒன்றில் காலடியில் கால்பந்துடன் ஆத்விக் காட்சியளிக்கிறார்.

இந்த அஜித் குடும்ப புகைப்படத்தை பகிரும் விஜய் ரசிகர்கள், அஜித் ’பின்னணியில்’ இடம்பெற்றிருக்கும் லியோ விளம்பர வாசகத்தை கொண்டாடி வருகிறார்கள். விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் லியோ திரைப்படத்துக்கு அஜித் விளம்பரம் செய்வதாகவும் ’கண்டுபிடித்து’ இருக்கிறார்கள். ரசிகர்களும், அவர்களின் மனோபாவமும் அலாதியானவை அல்லவா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in