பரபரப்பு... மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி - விஜய் ரசிகர்களின் வெறுப்பு போஸ்டர்

பரபரப்பு... மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி - விஜய் ரசிகர்களின் வெறுப்பு போஸ்டர்

இயக்குநர் மிஷ்கினுக்கு நடிகர் விஜயின் ரசிகர்கள்  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல  இயக்குநரான மிஸ்கின் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதுடன் நடிகராகவும் மிளிர்ந்து வருகிறார். அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுப்பதில் திறமைமிக்கவர் இயக்குநர் மிஸ்கின்.

இவரின் முதல் படமான சித்திரம் பேசுதடி திரைப்படம்  தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.  தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இயக்குநர் மிஸ்கின் விழாக்களில்  மேடையில் பேசும்போது  சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். இதனிடையே, லியோ படத்தில் நடிகர் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் அண்மையில்  பத்திரிகையாளரிடம் தெரிவித்திருந்தார். 

அந்த பேட்டியில் மிஸ்கின் விஜய்யை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தளபதி ரசிகர்கள் சார்பாக மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டைரக்டர் மிஷ்கின்
டைரக்டர் மிஷ்கின்

அதில், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in