ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்

பால் அபிஷேகத்தை தவிர்த்து ஏழைகளுக்கு பால் பாக்கெட் வழங்கினர்
ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்
பால் பாக்கெட் வழங்கும் விஜய் ரசிகர்கள்

மயிலாடுதுறையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்பட கொண்டாட்டத்தில் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து விட்டு கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி அசத்தியிருக்கிறார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான `பீஸ்ட்' திரைப்படம் இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்களுக்காக காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது காட்சி தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கம் முன்பாக மாவட்டத் தலைவர் குட்டி பேபி தலைமையில் கூடிய விஜய் மக்கள் இயக்கத்தினர் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் விஜய் இருப்பதைப் போன்று பொருத்தப்பட்டிருந்த பேனரின் கீழ் இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள் அடுத்து செய்த காரியம் தான் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. வழக்கம்போல் தங்கள் தலைவனின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்த அந்த ரசிகர்கள், அதற்கு பதிலாக ஏழை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி கொண்டாடினர். அவர்களின் இந்த செயல் அங்கிருந்த அனைவராலும் பாராட்டப் பெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட விஜய் ரசிகர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான். அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஊரடங்கின் போது, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறுக்காக அட்மிட் செய்யப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பிச் செல்ல இலவசமாக 2 கார்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர். கரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கினர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஏழை கூலி தொழிலாளர்களுக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையையும் வழங்கினர். அந்த வகையில் தற்போது பால் பாக்கெட்டுகளை வழங்கி இருக்கின்றனர்.

Related Stories

No stories found.