வாங்க, இலவசமா பெட்ரோல் வாங்கிட்டுப் போங்க!

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர் விஜய் ரசிகர்கள்
வாங்க, இலவசமா பெட்ரோல் வாங்கிட்டுப் போங்க!

சென்னை தாம்பரத்தில் `பீஸ்ட்' திரைப்படம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கினர் விஜய் ரசிகர்கள்.

நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. அதிகாலையில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ரசிகைகள் தியேட்டர்கள் முன் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரசிகைகள் குத்தாட்டம் போட்டு அசத்தினர். பல பகுதிகளில் விஜய் ரசிகர்கள் நலத் திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் விஜய் நடித்த `பீஸ்ட்' படம் பார்க்க வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி விஜய் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடினர்.

Related Stories

No stories found.