’லியோ’ ஃபர்ஸ்ட் ஷோ... தியேட்டரில் நிச்சயதார்த்தம் நடத்திய விஜய் ரசிகர்!

விஜய் ரசிகரான வெங்கேடஷின் நிச்சயதார்த்தம்
விஜய் ரசிகரான வெங்கேடஷின் நிச்சயதார்த்தம்

புதுக்கோட்டையில் 'லியோ 'படத்தின் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர் ஒருவர் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தமிழக முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், விஜயின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது காதலியுடன் 'லியோ' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்துள்ளார்.

படம் தொடங்கியவுடன், அவர் ரசிகர்கள் முன்னிலையில் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணத்தை அனைவர் முன்பாக நிச்சயம் செய்து கொண்டார். அப்போது அங்கிருந்த விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தம்பதிகளை வாழ்த்தினர்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜய் ரசிகர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தம் திரையரங்கில் நடைபெற்றுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in