மீண்டும் `குஷி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மீண்டும் `குஷி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு குஷி என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

விஜய், ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’குஷி’. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படமான இது, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தின் தலைப்பை, விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு இப்போது வைத்துள்ளனர். படத்தை தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார்.

சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹிஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் 23-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in