படம் படுதோல்வி: சம்பளத்தில் 6 கோடியை திருப்பிக் கொடுக்கும் பிரபல ஹீரோ!

படம் படுதோல்வி: சம்பளத்தில் 6 கோடியை திருப்பிக் கொடுக்கும் பிரபல ஹீரோ!

படம் படுதோல்வி அடைந்ததால் அதில் நடித்த ஹீரோ, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பிக்கொடுக்க முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’லைகர்’ படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது. புரி ஜெகநாத் இயக்கிய இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இது, ஹீரோ விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, கரண் ஜோஹர் ஆகியோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால், இதே டீம் அடுத்து உருவாக்குவதாக இருந்த ’ஜனகணமன’ படத்தை நிறுத்திவிட்டது.

இந்நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட, ’லைகர்’ படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் 6 கோடியை திருப்பிக் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல இயக்குநர் புரி ஜெகநாத்தும் தனது சம்பளத்தில் சில கோடிகளை விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை விஜய் தேவரகொண்டா தரப்போ, படக்குழுவோ உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in