`நிர்வாண போஸ் கொடுக்கத் தயார்': விஜய் தேவரகொண்டா அதிரடி அறிவிப்பு

`நிர்வாண போஸ் கொடுக்கத் தயார்': விஜய் தேவரகொண்டா அதிரடி அறிவிப்பு

``நிர்வாண போஸ் கொடுப்பது பற்றி கவலையில்லை'' என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறினார்.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் பத்திரிகை ஒன்றுக்காக எடுத்த, நிர்வாண புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாயின. இந்த புகைப்படங்கள் கடும் விவாதத்தை கிளப்பின. சமூக வலைதளங்களில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன. பலர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், ‘ரன்வீர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பது முட்டாள்தனம். நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அநீதி, அடக்குமுறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் ரன்வீரின் புகைப்படங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். உங்கள் விருப்பங்களை எங்கள் மீது திணிக்க வேண்டாம்’ என்று எதிர்ப்பாளர்களை கண்டிக்கும் வகையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங் மீது புகார் அளித்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண போட்டோஷூட் எடுத்தார். இதுவும் பரபரப்பானது. இப்போது நடிகர் விஜய் தேவரகொண்டா, நிர்வாண போஸ் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தி இயக்குநர் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டேவுடன் கலந்துகொண்டார். அப்போது, சர்வதேச பத்திரிகைக்காக, நிர்வாண போஸ் கொடுப்பீர்களா? என்று விஜய் தேவரகொண்டாவிடம் கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு, ’நன்றாக படமாக்கப்பட்டால், அது பற்றி எனக்கு கவலையில்லை’ என்றார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத் இயக்கும் ’லைகர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அனன்யா பாண்டே ஹீரோயின். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் வெளியாகி ஏற்கெனவே சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in