விஜய் தேவரகொண்டாவின் `லைகர்’ ஜெயம் ரவி பட ரீமேக்கா?

விஜய் தேவரகொண்டாவின் `லைகர்’ ஜெயம் ரவி பட ரீமேக்கா?

’லைகர்’ , ஜெயம் ரவி படத்தின் ரீமேக்கா? என்பதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.

பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம், ’லைகர்’. புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உட்பட பலர் நடிக்கின்றனர். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு மணி சர்மா இசை அமைக்கிறார்.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே

இயக்குநர் கரண் ஜோஹர், புரி ஜெகநாத், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். வரும் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில், இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம், இது ஜெயம் ரவி, அசின் நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் ரீமேக்கா? என்று கேட்கப்பட்டது.

இதை மறுத்த விஜய் தேவரகொண்டா, ``குத்துச் சண்டைக் கதை என்பதால் அப்படி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. இரண்டும் வெவ்வேறானது. அதிலும் அம்மா சென்டிமென்ட் உண்டு என்றாலும் இது வேறு கதை. நான் எப்போதும் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன். ரீமேக்கை நான் விரும்புவதும் இல்லை'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in