விஜய் வந்தது இன்சூரன்ஸ் காலாவதியான காரா?

விஜய் தரப்பு விளக்கம்
விஜய் வந்தது இன்சூரன்ஸ் காலாவதியான காரா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய், இன்சூரன்ஸ் காலாவதியான காரில் வந்ததாக வெளியான செய்திக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யுடன் சர்ச்சையும் சேர்ந்துக் கொள்கிறது. நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 7 மணிக்கே சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்தார் விஜய். வாக்காளர்கள் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தபோது விஜய் சென்றபோது நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக விஜய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த விஜய், இந்த முறை சிவப்பு காரில் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விஜய் வந்த சிவப்பு நிற காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விஜய்யின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். "கடந்த சில நாட்களாக, தளபதி விஜய்யின் கார் இன்சூரன்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காப்பீட்டின் நகல் இங்கே உள்ளது. அதில் காப்பீடு மே 28, 2022 வரை செல்லுபடியாகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in