பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி நடிகர் ரூ.1 கோடி பேரம்: பாதிக்கப்பட்ட நடிகை பகீர் புகார்!

பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி நடிகர் ரூ.1 கோடி பேரம்: பாதிக்கப்பட்ட நடிகை பகீர் புகார்!

பாலியல் வழக்கை வாபஸ் வாங்குவதற்கு ஒரு கோடி வரை பேரம் பேசினார்கள் என்று பாதிக்கப்பட்ட நடிகை கூறியுள்ளார்.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை அதில் வெளியிட்டார். இது பரபரப்பானது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் விஜய் பாபு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். போலீஸார் அவர் பாஸ்போர்ட்டை முடக்கினர்.

பின்னர் அவர் கொச்சி திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை ஏதும் செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்காததால் அவர் இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவருடைய செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் புகாரை வாபஸ் வாங்குவதற்கு நடிகர் தரப்பில் இருந்து ரூ.1 கோடிவரை பேரம் பேசப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த நடிகை அளித்துள்ள பேட்டியில், " புகாரை வாபஸ் பெறுமாறு அந்த நடிகரின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ரூ.1 கோடி வரை தருவாகவும் அவர் சொன்னார். என்னவாக இருந்தாலும் புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என அந்த நடிகை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in