மீண்டும் இணையும் விஜய் - அட்லீ கூட்டணி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

மீண்டும் இணையும் விஜய் - அட்லீ கூட்டணி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

‘தளபதி 68’ படத்தில் விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் பரவிவந்த நிலையில், அந்தத் தகவல் தற்போது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றிபெற்றவை. இருவரும் மீண்டும் இணைந்து அடுத்த படம் செய்வது எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இருவரும் ‘தளபதி 68’ படத்தில் மீண்டும் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் தற்போது கசிந்திருக்கின்றன.

தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ இந்திப் படத்தை இயக்கிவரும் அட்லீ, இப்படத்தை முடித்த பின்னர் ‘தளபதி 68 படத்துக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு இறுதியில் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்குத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘தளபதி 68’ படத்தைத் தயாரிக்க இருப்பதாகக் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் - அட்லீ வெற்றிக் கூட்டணி நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் இணைய உள்ளதால் ‘தளபதி 68’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எகிறத் தொடங்கியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in