விஜய் ஆண்டனி நடிக்கும் ’ரத்தம்’

விஜய் ஆண்டனி நடிக்கும் ’ரத்தம்’

விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் படத்துக்கு ’ரத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'தமிழ்ப் படம்', 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெஞ்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ’ரத்தம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ’தமிழ்ப் படம்’ என். கண்ணன் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனியின், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் ஆகிய படத் தலைப்புகள் கவனம் பெற்றது போல, ’ரத்தம்’ தலைப்பும் கவனம் ஈர்க்கும் என்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அருண் விஜய்யுடன் அவர் நடித்துள்ள ’அக்னி சிறகுகள்’ படமும் முடிந்துவிட்டது. அவர், இப்போது ’பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார். ’கொலை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in