விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங் நிறைவு: விரைவில் பாடல்கள்!

விஜய் ஆண்டனியின்  
‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங் நிறைவு: விரைவில் பாடல்கள்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016-ல் வெளியான படம், 'பிச்சைக்காரன்'. இதில் சட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், தீபா ராமானுஜம், இயக்குநர் மூர்த்தி உட்பட பலர் நடித்தனர். விஜய் ஆண்டனியே தயாரித்து, இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என விஜய் ஆண்டனி அறிவித்தார்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி, தானே இயக்கப் போவதாகவும் கூறினார். அதன்படி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. ரித்திகா சிங், காவ்யா தாப்பர் நாயகிகளாக நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துவிட்டது. விரைவில் இசை வெளியீடு இருக்கும் என்றும் இந்த வருடம் படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் ஆண்டனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’ படங்கள் வெளியாக இருக்கின்றன. ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ரத்தம்’, ‘கொலை’ ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் ’வள்ளிமயில்’ படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in