நீ இல்லாமல் வாழ முடியவில்லை... மகளின் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்!

மகளுடன் விஜய் ஆண்டனி
மகளுடன் விஜய் ஆண்டனி

தன் மகளின் பிரிவு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஃபாத்திமா விஜய் ஆண்டனி
ஃபாத்திமா விஜய் ஆண்டனி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மீராவின் இந்த மரண செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் துயரில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவு ஒன்றைப் மீராவின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘நீ எங்களுடன் 16 வருடங்கள்தான் இருப்பாய் எனத் தெரிந்திருந்தால், உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும் நிலவையும் கூட காட்டியிருக்க மாட்டேன். உன் நினைவால் நான் தினமும் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்ப வா! லாரா உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்! லவ் யூ தங்கம்!’ என விஜய் ஆண்டனியையும் டேக் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஃபாத்திமா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in