விஜய் ஆண்டனி நடிக்கும் தெலுங்கு படம் `ஹத்யா'

விஜய் ஆண்டனி நடிக்கும் தெலுங்கு படம் `ஹத்யா'

நடிகர் விஜய் ஆண்டனி `ஹத்யா' என்ற தெலுங்கு படத்தில் நடக்க உள்ளார். லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழில் 'விடியும் முன்', ஆங்கிலத்தில் 9 லைவ்ஸ் ஆஃப் மாரா போன்ற படங்களைத் தயாரித்த பாலாஜி குமார் 'ஹத்யா' படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் துப்பறியும் நபராக ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். ரித்திகா சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ​​ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். 'ஹத்யா' படம் 1923ல் நடந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in