ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனி

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சி.எஸ்.அமுதன் இயக்கும் ’ரத்தம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் வெஞ்சர்ஸ் தயாரிக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். என். கண்ணன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. அடுத்து, கொல்கத்தாவில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அந்த ஷெட்யூலுடன் இந்தப் படம் நிறைவடைகிறது.

மழை பிடிக்காத மனிதன் - விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ்
மழை பிடிக்காத மனிதன் - விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ்

இதற்கிடையே, விஜய் மில்டன் இயக்கும் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திலும் நடித்து வருகிறார், விஜய் ஆண்டனி. இதில் சரத்குமார், மேகா ஆகாஷ், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பிலும் ’ரத்தம்’ படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருகிறார், விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் மார்ச் 15-ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்கிறது விஜய் ஆண்டனி தரப்பு.

Related Stories

No stories found.