நயன்தாரா படத்தில் விஜய், தீபிகா படுகோன்?

நயன்தாரா படத்தில் விஜய், தீபிகா படுகோன்?

ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடிக்கும் ’ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், பிரியாமணி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் புணேவில் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது.

அட்லீ, ஷாருக்கான்
அட்லீ, ஷாருக்கான்

பின்னர் ஷாருக், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். அது முடிந்த பின் மும்பையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஷாருக்கான்
தீபிகா படுகோன், ஷாருக்கான்

இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் ராணா கெஸ்ட் ரோலில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தீபிகா படுகோனும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்யும் இந்தப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுபற்றி உறுதி செய்யவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in