1995-ல் வெளியான விஜய்-அஜித் இணைந்து நடித்த படம் ரீ-ரிலீஸ்!

1995-ல் வெளியான விஜய்-அஜித் இணைந்து நடித்த படம் ரீ-ரிலீஸ்!

விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நாளில் கோதாவில் குதிக்கவிருக்கும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் - அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

நடிகர் விஜய்- அஜித் நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரே நாளில் அதாவது ஜனவரி 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரது திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்பதால் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், அஜித் -விஜய் இருவரும் தங்களது ஆரம்பகாலத்தில் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட இருக்கிறது.

சமீபகாலத்தில் ரீ-ரிலீஸ் என்ற ட்ரெண்ட் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ரஜினியின் ‘பாபா’, ‘சிவாஜி’ ஆகிய படங்கள் கூட மீண்டும் வெளியாகி ஓரளவு நல்ல வசூலைக் கொடுத்தது. ஜானகி செளந்தர் இயக்கத்தில் அஜித்- விஜய் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ 1995-ல் வெளியானது. தற்போது ‘வாரிசு’, ‘துணிவு’ ஒரே நாளில் வெளியாவதை ஒட்டி இந்தத் திரைப்படத்தை மீண்டும் நாளை வெளியிட இருக்கிறார்கள்.

அஜித்- விஜய் இணைந்து நடித்துள்ள படம் ரீ ரிலீஸாக இருப்பது இரண்டு ஹீரோக்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in