`வாரிசு'- 'துணிவு' காட்சிகள் எண்ணிக்கையில் முந்துவது யார்?

வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு

விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டும் வரும் 11-ம் ஒரேநாளில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருவரும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பதால் ஒரே அளவிற்கு இருவருக்கும் திரையரங்கம் ஒதுக்குவது தொடங்கி, இருவருக்கும் சம அளவில் கொண்டாட்டங்களை உறுதிசெய்வதுவரை திரையரங்குகள் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்துவருகின்றனர்.

திரையரங்குகள் இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் திரையரங்க வளாகத்திற்குள் பதாகைகள் வைக்கவும் சமமான அளவிற்கு இடம் ஒதுக்கியுள்ளன. திருநெல்வேலியில் விஜய், அஜித் ரசிகர்களின் சார்பில் சம அளவிலேயே கட் அவுட்டும் வைக்கப்பட்டு உள்ளது.

'வாரிசு', 'துணிவு' இருபடங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனமே வெளியிடுவதால் திரையரங்குகளிலும் சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாகத் திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால் முதல் நாளில் 'வாரிசு', 'துணிவு' இரு படங்களுமே தலா 32 காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதில் பெரும்பான்மையான திரையரங்குகள் இரு படங்களையுமே திரையிடுகின்றன.

அஜித்தின் 'துணிவு' 11-ம் தேதி அதிகாலை 1 மணிக்கே ரசிகர்கள் காட்சியும், விஜய்யின் 'வாரிசு' ரசிகர்கள் காட்சி 4 மணிக்கும் திருநெல்வேலியில் திரையிடப்படுகின்றது. சரி சம அளவிலான காட்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவை உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில் 'வாரிசு', 'துணிவு' இரண்டில் எது வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in