
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர், நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியவர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தில்ராஜு தயாரிக்கிறார்.
இதன் படப்படிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன. இதில், விஜய் ஜோடியாக ரஷ்மிகா நடிக்க உள்ளதாக தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.