விஜய் 66; மார்ச்சில் தொடக்கம்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விஜய்யின் 66-வது படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

நடிகர் விஜய், இப்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, ஜான் விஜய், ஷாஜி சென், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கியவர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். அவர் கூறும்போது, “மார்ச் மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் தீபாவளிக்கு படம் வெளியாகும். இல்லை என்றால் அடுத்த பொங்கலுக்கு உறுதியாக ரிலீஸ் ஆகும்” என்றார்.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கிறார். அவர் கியாரா அத்வானியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கியாரா அத்வானி, தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in