நயன்தாரா தந்தைக்கு விக்னேஷ் சிவனின் 'டச்சிங்' வாழ்த்து!

நயன்தாரா தந்தைக்கு விக்னேஷ் சிவனின் 'டச்சிங்' வாழ்த்து!

நடிகை நயன்தாராவின் தந்தைக்கு 'டச்சிங்கான' பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் இயக்கி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை குரியனின் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அந்தப் புகைப்படத்தில் நயன்தாராவின் தந்தை மற்றும் தாய் இருவருக்கும் இடையே விக்னேஷ் சிவன் அமர்ந்திருக்க, நயன்தாரா அப்பாவின் மற்றொரு பக்கம் இருக்கிறார். அந்தப் புகைப்படத்துடன் நயன்தாராவின் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், ' இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அச்சன்/குரியன். மகிழ்ச்சி என்பது உங்கள் புன்னகையைப் பார்ப்பது, நீங்கள் உண்பதைக் காண்பது, நீங்கள் எங்களைக் கவனித்துக்கொள்வதை சொல்வது. நீங்கள் எங்களுடன் இருப்பது வாழ்க்கையை அழகாக்குகிறது. கடவுள் உங்களுக்கு வலிமையையும், சக்தியையும் தரவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எங்களின் ஆசிர்வாதம்’என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.