இரட்டை அப்டேட்: 2-ல் விளையாடிய விக்னேஷ்சிவன்

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல்

வித்தியாசமாக சிந்திக்கவும், வெளிப்படுத்தவும் கலைஞர்களுக்கு சொல்லித் தர தேவையில்லை. 2 என்ற எண்ணை மையமாக வைத்து தனது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்துக்கான, வெகுஜன கவன ஈர்ப்பில் இரண்டில் ஒன்று பார்த்துவிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இன்றைய தினத்தை எண்களால் எழுதினால் 02.02.2022 என ஒரே 2 மயமாக இருக்கும். இந்த நாளில் 2.22 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது காத்துவாக்குல ’ரெண்டு’ காதல் திரைப்படத்துக்கான 2 அப்டேட்டுகளை வெளியிட்டு இரட்டை சந்தோஷம் அடைந்திருக்கிறார்.

இந்த அப்டேட்டுகளில் முதலாவது, திரைப்படத்தின் டீசர் பிப்.11 அன்று வெளியாகும் என்கிறது. அந்த தினத்தில்கூட(11.2.2022) 2ன் நர்த்தனம் தொடர்கிறது. இரண்டாவது அப்டேட்டாக, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், ஏப்ரலில் வெளியாகும் என்கிறது. நேரடி திரையரங்கு வெளியீடு என்பதையும் இந்த அறிவிப்பில் விக்னேஷ் சிவன் உறுதி செய்திருக்கிறார்.

இந்த 2 அப்டேட் தகவல்களுடன் இணைத்திருக்கும் படத்திலும், நாயகன் விஜய் சேதுபதியுடன், இரட்டை நாயகியராக நயன்தாரா - சமந்தா என இருவர் இணைந்துள்ளனர். விக்னேஷ் சிவன் எதிர்பார்த்தவாறே அவரது காத்துவாக்குல ரெண்டு காதல் அறிவிப்பும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in