பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன்: கதைக்களம் என்ன?

விக்னேஷ் சிவன் & பிரதீப் ரங்கநாதன்
விக்னேஷ் சிவன் & பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன்: கதைக்களம் என்ன?

பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’ஏகே 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து அந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்து என்ன படம் இயக்க இருக்கிறார் என்ன கதை என்பது குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அடுத்து அவர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைய இருக்கிறார் எனவும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் களத்தை மையமாக கொண்டு உருவாகிறது எனவும் சொல்லப்படுகிறது. படத்திற்கு எல்.ஐ.சி. (லவ் கார்ப்பரேஷன் இன்ஷூரன்ஸ்) எனவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டத் தகவலை படக்குழு தரப்பு விரைவில் அறிவிக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in