`விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கிவிட்டது `காத்து வாக்குல ரெண்டு காதல்'

ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் நன்றி
`விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கிவிட்டது `காத்து வாக்குல ரெண்டு காதல்'

ஆரம்பத்தில் காற்று வாங்கிய `காத்து வாக்குல ரெண்டு காதல்', படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அதன் வசூலும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

நானும் ரவுடி தான்' படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இதையடுத்து தற்போது ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தை இயக்கி கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் செய்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. அனிருத் இசைமையத்துள்ளார்.

முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இரண்டு பெண்களை ஒருவர் காதலிக்கும் கதை என்பதால் ஆரம்பத்தில் இந்த கதைக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. படம் வெளியான நாளில் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் கிடைத்தன. அதனால் திரையரங்குகளும் காற்று வாங்கின. ஆனால் கடந்த 2 தினங்களாக இந்த படம் ரசிகர்களால் அதிக அளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தனது மகிழ்ச்சியை செய்திருக்கிறார். மேலும் அவரது அந்த பதிவில், ``பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த, ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுக்களை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி'' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.