எம்.எஸ்.தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்

எம்.எஸ்.தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்
எம்.எஸ்.தோனி, விக்னேஷ் சிவன்

கிரிக்கெட் வீரர் தோனியை விரைவில் இயக்க இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், “என் ரோல் மாடல், என் ஹீரோவை நான் சந்தித்தபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை ஒரு கேப்ஷனால் விளக்கமுடியாது. அவரை சந்தித்தது, அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது தொடர்பான ஓர் அழகிய கதை விரைவில். வாழ்க்கை அழகானது என்பதை இந்த தருணம் உணர்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், தோனியை சந்தித்ததால், முக்கிய கனவுகளில் ஒன்று நனவாகியது என்றும் அவரை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளம்பர வீடியோவை இயக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in