பைக் தேடல் ஒருபக்கம், தேனிலவு மறுபக்கம்: பார்சிலோனாவில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடி விறுவிறு!

பைக் தேடல் ஒருபக்கம், தேனிலவு மறுபக்கம்: பார்சிலோனாவில்  விக்னேஷ் - நயன்தாரா ஜோடி விறுவிறு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி அண்மையில் ஸ்பெயினுக்குச் சென்றுள்ளது. அந்நாட்டின் பார்சிலோனா நகரில் இருவரும் இரண்டாவது முறையாகத் தேனிலவு கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார். இந்திய சுதந்திர தினத்தையும் இருவரும் அங்கேயே கொண்டாடினர். இந்தப் பயணத்தில் இன்னொரு சர்ப்ரைஸும் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62-வது படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் லொக்கேஷன் பார்க்கத் தான் இருவரும் பார்சிலோனா போயிருப்பதாகக் கூறுகிறது கோடம்பாக்கம் வட்டாரம். அதுமட்டுமல்ல, இப்படத்துக்காக அதிநவீன பைக் ஒன்றையும் இருவரும் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

ஏற்கெனவே அஜீத் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அதகளப்படுத்தின. அதேபோல் ‘ஏகே-62’ படத்திலும் நிறைய பைக் காட்சிகள் இருக்கின்றனவாம். அதற்காக வித்தியாசமான, விசேஷமான பைக் தேடி அலைகிறதாம் நயன் - சிவன் ஜோடி!

ஜனவரி 1-ல் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவனின் படத்தில் இணைய உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in