ஷீரடியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி

ஷீரடியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோயில்களுக்குச் செல்வதை கடந்த சில வருடங்களாக, வழக்கமாக வைத்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

படம் ரிலீஸ் ஆனதும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதி கோயிலுக்குச் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில், இருவரும் இப்போது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், ’இந்த போட்டோவுக்கு, ஷீரடியில் இருந்து என் கண்மணியுடன்... அனைத்து இனிமையான தருணங்களுக்காக சாய்பாபாவுக்கு நன்றி சொல்லும் பயணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.