நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி புதிய தகவல்!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி புதிய தகவல்!

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் பற்றிய புதிய செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தபோது அவருக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக கோயில்களுக்கு ஒன்றாகச் சென்று வருவதை வழக்கமாக்கி உள்ளனர்.

இருவரும் இணைந்து இப்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பணியாற்றியுள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சமந்தாவும் இருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த வருடமே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில், வரும் ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வருட இறுதியில் அஜித் குமார் நடிக்கும் 62-வது படத்தை இயக்க இருக்கிறார், விக்னேஷ் சிவன்.

அதற்கு முன், அவர் நயன்தாராவைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறுமா, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மட்டும் நடைபெறுமா என்பது பற்றிய தகவல் இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in