
பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன் சினிமாவில் அறிமுகமாகிறார்.
பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ், ஜெய்ஹிந்த், கர்ணா, தில், பூவெல்லாம் உன் வாசம், ரன், அன்பே சிவம் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார். இவர் மகன் ஹர்ஷவர்தன் இப்போது இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கிறார். இது சிபிரஜூக்கு 20 வது படம். முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாகவும் ஆக்சன் திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் மூலம் ஹர்ஷவர்தன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். அவர் கூறும்போது, கடந்த 5 வருடங்களாக தென்னிந்தியத் இசைத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் மற்றும் பலருக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இசையமைப்பாளராக இது எனது முதல் படம். இந்தப் படத்தில் பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விரைவில் பாடல்களுக்கான ரெக்கார்டிங் தொடங்க இருக்கிறது’ என்றார்.