இரண்டு பாகங்களாக வெளியாகிறது ‘விடுதலை’ - வெற்றிமாறன் பிறந்தநாளில் புது அப்டேட்!

இரண்டு பாகங்களாக வெளியாகிறது ‘விடுதலை’ - வெற்றிமாறன் பிறந்தநாளில் புது அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘அசுரன்’ , ‘வடசென்னை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறனின் பிறந்தநாளான இன்று, அவரின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’விடுதலை’ திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனமும், வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in