விதார்த் நடிக்கும் சைக்கோ த்ரில்லருக்கு ஹீரோயின் தேடும் படக்குழு!

விதார்த் நடிக்கும் சைக்கோ த்ரில்லருக்கு ஹீரோயின் தேடும் படக்குழு!

விதார்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது.

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ த்ரில்லர் படம் இது. கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.

தொடக்கவிழாவில்
தொடக்கவிழாவில்

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லனை தேடி வருகின்றனர். இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் நந்தகுமார் ஐஏஎஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, அசோக்குமார், என்.ராகவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in