'ஆர்.ஆர்.ஆர்’ ஹீரோவை இயக்குகிறார் வெற்றிமாறன்?

'ஆர்.ஆர்.ஆர்’ ஹீரோவை இயக்குகிறார் வெற்றிமாறன்?

இயக்குநர் வெற்றிமாறன், 'ஆர்.ஆர்.ஆர்' பட ஹீரோவை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ’விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க இருக்கிறார். இதை கலைப்புலி எஸ்.தாணு இயக்குகிறார். இதற்கிடையே, அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர், பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆரை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலம், பான் இந்தியா ஸ்டார் ஆகியிருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் இப்போது கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்து கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதுபற்றிய அறிவிப்பு சமீபத்தில் வந்தது.

இதற்கிடையில் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்து வெற்றிமாறன் படத்தின் லைன் சொன்னதாகவும் அது பிடித்ததால், அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் இந்தப் படத்தை பான் இந்தியா முறையில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இருவரும் இணையும் படம் பற்றி கடந்த வருடமும் செய்திகள் வெளியாகி இருந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in