பிரபல தெலுங்கு நடிகர் மறைவு!

காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா
காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா

3 தலைமுறை தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவரும், நடிகருமான ’காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா’ இன்று காலமானார்.

’பாரத் பந்த்’ திரைப்படத்தின் வாயிலாக தென்னக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இவர், தனது திரையுலக வாழ்க்கையை ஆடை வடிவமைப்பாளராக தொடங்கியவர். ஆந்திராவின் விசாகபட்டினத்தை சேர்ந்த இவர், என்டிஆர் காலம் தொடங்கி அவரது பேரன் காலம் வரை ஆடை வடிவமைப்பில் தொடங்கி சக நடிகர் என்பவது வரை உடன் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா கேட்டு கொண்டதற்காக பாரத் பந்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த வகையில் 100க்கும் மேலான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.

வயது மூப்பின் காரணமாக, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தனது 88வது வயதில் இன்று காலமானார். அன்னாரின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமன்றி, தென்னக சினிமாவின் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in