தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு

தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளர் திடீரென உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங். தெலுங்கில் பல படங்களைத் தயாரித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டரின் சேர்மனான இவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி, நாக சவுரியாவின் லக்‌ஷ்யா, நாகார்ஜுனா, காஜல் அகர்வாலின் த கோஸ்ட் உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இப்போது தனுஷ் நடிப்பில் சேகர் காம்முலா இயக்க உள்ள திரைப்படம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களையும் தயாரித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவை அடுத்து தெலுங்கு திரையுலகம் சோகத்தில் உள்ளது.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். மறைந்த நாராயண் தாஸின் மகன் சுனில் நாரங்கும் முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள் ளார். ’எங்கள் அன்புக்குரிய தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நாரங்கின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். சுனில் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள் ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in