மூத்த கன்னட நடிகர் காலமானார்

மூத்த கன்னட நடிகர் காலமானார்
மூத்த கன்னட நடிகர் ராஜேஷ்

பிரபல மூத்த கன்னட நடிகரும், நடிகர் அர்ஜுனின் மாமனாருமான ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 89.

பிரபல கன்னட நடிகர் ராஜேஷ். இவர் சுவாசப்பிரச்சினை மற்றும் வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக கடந்த 9-ம் தேதி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கன்னட நடிகர் ராஜேஷ்
கன்னட நடிகர் ராஜேஷ்

இந்நிலையில், அவர் உடல்நிலை இன்று காலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ராஜேஷ், தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்டோரின் நடிப்பைப் பார்த்து, 60-களில் சினிமாவுக்கு வந்தவர். சுமார் 150 படங்களில் நடித்துள்ள இவர் நடிப்புக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கலதபஸ்வி ராஜேஷ் என்ற பெயரில் பிரபலமான இவர், நடிகர் அர்ஜுனின் மாமனார். ராஜேஷின் மகள் ஆஷா ராணியை, நடிகர் அர்ஜுன் திருமணம் செய்துள்ளார்.

ராஜேஷ் மறைவை அடுத்து, கன்னட நடிகர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.